×

மாகேவில் மதுக்கடைகள் 31ம்தேதி வரை மூடல்

புதுச்சேரி, மார்ச் 17: கேரளாவை ஒட்டியுள்ள, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட மாகே பிராந்தியத்தில் கொரோனா பீதியால் வரும் 31ம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.சீனாவின் யுகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாரும் வர வேண்டாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்கள் உள்ளன. இதில் கேரளா அருகேயுள்ள மாகே பிராந்தியத்தில் கோவிட் 19 தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கோவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக, அந்த மாநிலத்தையொட்டி அமைந்துள்ள புதுச்சேரி பிராந்தியமான மாகேயில் பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அங்குள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர் அமன் ஷர்மா பிறப்பித்துள்ள உத்தரவில், மாகேயில் உள்ள மதுவிற்பனை கடைகள், பார்கள், மதுவிற்பனையுடன் கூடிய உணவகங்களை வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும். அருகாமை மாநிலமான கேரளத்திலும், நாடு முழுவதும் உள்ள கோவிட் 19 தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாகயேில் மதுக்கடைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என

Tags : Closure ,liquor stores ,Macau ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...