×

கோவை மண்டல போக்குவரத்து துறையில் 8 புதிய ஆர்.டி.ஓ.க்கள் பதவியேற்பு

கோவை, மார்ச்17: கோவை மண்டல போக்குவரத்து துறையில் 8 புதிய ஆர்.டி.ஓ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். கோவை  சரக போக்குவரத்து துறையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கோவை  தெற்கு, வடக்கு, மையம், மேற்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம்,  பொள்ளாச்சி, ஊட்டி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், சூலூர்,  அவினாசி, காங்கயம், வால்பாறை, மேட்டுப்பாளையம், கூடலூர், உடுமலைப்பேட்டை  ஆகிய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் கடந்த பிப்.29ம் தேதி தமிழகம் முழுவதும் 38 ஆர்.டி.ஓ.க்களை பணியிட  மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கோவை சரகத்திற்குட்பட்ட  6 ஆர்.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மாற்றப்பட்ட 6 ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் காலியாக இருந்த 2 ஆர்.டி.ஓ. பணியிடம் என மொத்தம் 8 பணியிடங்களுக்கு அங்கமுத்து (கோவை ஜேடிசி அலுவலகம்), சிவகுருநாதன் (கோவை வடக்கு), குமரவேல் (கோவை மேற்கு ), செந்தில்குமார் (தாராபுரம்), முருகானந்தம் (பொள்ளாச்சி), தியாகராஜன் (ஊட்டி), கதிரவன் (மேட்டுப்பாளையம்), வெங்கட்ராமன் (திருப்பூர் தெற்கு) ஆகியோர் புதிதாக பதவியேற்றுக்கொண்டனர்.

Tags :
× RELATED வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு