×

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் மிதமானது முதல் கனமழை பெய்தது

 

கோத்தகிரி, மே 20: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மிதமானது முதல் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் 18,19,20 ஆகிய 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 8 செமீ மழை பதிவானது.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலை முதலே கோத்தகிரி, கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு பிற்பகல் முதல் மிதமானது முதல் சாரல் மழை பெய்ய துவங்கியது. நேற்று காலை கோத்தகிரி நகர் பகுதி,கீழ் கோத்தகிரி, டானிங்டன், ஒரசோலை,கட்டபெட்டு, அரவேனு, சக்கத்தா, கொட்டக்கொம்பை, தட்டப்பள்ளம், எஸ்.கைக்காட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்தது.

தொடர்ந்து, மழையின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று மதியம் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த மழையானது, தொடர்ந்து கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனால் மலை காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை கடும் குளிரில் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

The post கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் மிதமானது முதல் கனமழை பெய்தது appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Meteorological Center ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்தது கோடை மழை