×

நீலகிரியில் தொடர் மழையால் அழுகிய டேலியா மலர்கள்

 

ஊட்டி, மே 21: தொடர் மழையின் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள டேலியா மலர்கள் அழுகி உதிர துவங்கியுள்ளன.  ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை காலமான மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக பூங்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்நிலையில், இம்முறை மலர் கண்காட்சிக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

டேலியா, மேரிகோல்டு, பேன்சி, கேளுண்டுல்லா, பெட்டூனியம் உட்பட பல்வேறு வகையான மலர் செடிகளில் பூத்து காணப்படுகின்றன. இந்நிலையில், ஊட்டியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதனால், பூங்காவில் உள்ள ஒரு சில மலர் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டேலியா மலர்கள் பாதிக்கப்பட்டு அழுகி உதிரத்துவங்கியுள்ளன. சில இடங்களில் மேரி கோல்டு மலர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் இன்னும் வாடாமல் உள்ளதால், அவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post நீலகிரியில் தொடர் மழையால் அழுகிய டேலியா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Ooty ,Ooty Botanical Garden ,Dinakaran ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...