×

பொதுமக்கள், காவல்துறை இடையே நல்லுறவு கபடி போட்டி

தா.பழூர், மார்ச் 17: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஏற்படும் விதமாக கபடிபோட்டி நடைபெற்றது.ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. சிந்தாமணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெற்றது. சிந்தாமணி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் உள்ள இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். விளையாடுவதற்கு வயது, எடை கட்டுப்பாடு கிடையாது இளைஞர்கள், ஆண்கள் என இருபிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது.

தா.பழூர் காவல் நிலையம் சார்பாக நடைபெற்ற கபடி போட்டியில் காவல் ஆய்வாளர் ரஞ்சனா, காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.இதில் வெற்றி பெற்ற அணிக்கு ஜெயங்கொண்டம் காவல்துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் பரிசுகள் வழங்கினார்.  இதில் சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags : Reconciliation rivalry ,civilians ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை