×

மாவிலங்கை வனப்பகுதி அருகே வழிப்பறி ஆசாமியை கைது செய்த எஸ்ஐக்கு பாராட்டு

பெரம்பலூர்,மார்ச்.13: பெரம்பலூர் அருகே மாவிலங்கை வனப்பகுதி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபரை துரிதமாகக் கைது செய்த கை.களத்தூர் சப்.இன்ஸ் பெக்டருக்கு எஸ்பி நிஷா பார்த்திபன் பாராட்டு தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் போலீஸ் சரக எல் லைக்குட்பட்ட நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்குமார்(18) என்பவர் கல்லூரிக்குச் செல்வதற் காக மாவிலங்கை வனப்பகுதி அருகில் சென்று கொண்டிருக்கும் போது, அங்குவந்த, பெரம்பலூர் மாவட்டம், வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்த கர்காமணி என்கிற மணிகண் டன் (33) என்பவர் மோகன் குமாரை வழிமறித்து அவர் வைத்திருந்த ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள செல்போ னையும்,

பணம் ரூபாய் 100 ஐயும் பறித்துச் சென்றுள் ளார். இதுசம்பந்தமாக கை. களத்தூர் காவல் நிலையத் தில் புகார்அளிக்கப்பட்டது. இதுகுறித்து கை.களத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந் தர் பாஷா வழக்குப் பதிவு செய்து,மேற்படி எதிரியை கைது செய்து, செல்போ னை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத் தார்.இச்செயலுக்கு பெரம் பலூர் மாவட்டஎஸ்பி நிஷா பார்த்திபன் சப்-இன்ஸ்பெ க்டரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Tags : Asami ,SI ,forest ,Mavilanga ,
× RELATED வெளியூர் செல்ல அனுமதி கோரி மரத்தில் ஏறி ஆசாமி ரகளை