×

குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு தர்மபுரியில் 3 நீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு, 3 நீர் திட்டங்களை நிறைவேற்ற, தமிழக அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும் என தர்மபுரி எம்பி நாடாளுமன்றத்தில் பேசினார். தர்மபுரி எம்பி டாக்டர் டிஎன்வி செந்தில்குமார், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசியதாவது: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் தவிக்கிறது. பல இடங்களில், நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கால்நடைகள்கூட, போதிய தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக 3 திட்டங்கள் உள்ளன. தர்மபுரி தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றில் ஓடும் உபரி நீரை, அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்களை பயன்படுத்தி, புதிய கால்வாய்கள் வாயிலாக கொண்டு சென்று, அப்பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்ப முடியும். இதை செய்தால், அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டும் உயர்வதோடு மட்டுமல்லாது, அதன்மூலம் எண்ணற்ற கிராம மக்களின், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை முற்றிலுமாக பூர்த்தி செய்ய முடியும்.

இதற்காக, கடந்த 2015ம் ஆண்டு 68 ஏக்கர் பரப்பளவு பகுதிகள் கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் கிடக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றினால், பாலக்கோடு, காரியமங்கலம் மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட, ஏறத்தாழ 1500 ஹெக்டேர் பரப்பளவு பயனடையும். மூன்றாவதாக, எண்ணெய்கல்புதூர் நீர் திட்டம். 380 ஹெக்டேர் பரப்பிலான இத்திட்டம் மூலம், கிருஷ்ணகிரியிலிருந்து காரிமங்கலத்திற்கு, தண்ணீர் கொண்டு வரும் நோக்கில் தீட்டப்பட்டது. ஆனால், இதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, போதிய நிதி ஒதுக்கி, இந்த 3 திட்டங்களையும், போர்க்கால அடிப்படையில், விரைந்து நிறைவேற்றுமாறு, தமிழக அரசை மத்திய நீர்வள ஜல்சக்தி துறை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.

Tags : Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி