×

தொழிலாளி கருகி பலி

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பனராத் தெருவை சேர்ந்தவர் கணேசன்(38). இவர் மரம் அறுக்கும் மில்லில் பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கேனை எடுத்து வந்து மண்ணெண்ணெய் என நினைத்து ஊற்றினார். ஆனால் அந்த கேனில் பெட்ரோல் இருந்துள்ளது. இதனால் குபீரென தீப்பற்றி எரிந்தது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். பின்னர் அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Worker karuki ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா