×

காரிமங்கலம் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி

காரிமங்கலம், மார்ச் 13: காரிமங்கலம் பகுதியில் முள்ளங்கி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.  காரிமங்கலம் அடுத்த சின்னமிட்டஅள்ளி, பெரியமிட்டஅள்ளி, திண்டல், மணிக்கட்டியூர், எலுமிச்சினஅள்ளி, முதலிப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில், முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக முள்ளங்கி 1 கிலோ ₹2 முதல் ₹4 வரை விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக முள்ளங்கி 1 கிலோ ₹2க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் முள்ளங்கி சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் சென்னை பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் முள்ளங்கி சாகுபடி செய்ய அதிக அளவில் செலவு செய்த நிலையில், தற்போது விற்கப்படும் விலையால் பெரும் நஷ்டம் ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags : region ,Karimamangalam ,
× RELATED தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக...