×

நஞ்சில்லா கிராமங்களை உருவாக்க பயிற்சி முகாம்

தர்மபுரி, மார்ச் 13: பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில், நஞ்சில்லா கிராமங்களை உருவாக்க பயிற்சி முகாம் பறையபட்டிபுதூரில் நடந்தது. பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு கால்வாய் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில், நீர்வளத்திட்டம் உலக வங்கி உதவியுடன் கோயமுத்தூரில் உள்ள நீர் நுட்ப மையம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் நஞ்சில்லா கிராமங்களை உருவாக்கும் பயிற்சி, பறையபட்டி புதூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்து பேசுகையில், ‘காய்கறி பயிர்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பூச்சி மற்றும் நோய்களின் அறிகுறிகள், அவற்றை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சள் வண்ண அட்டை, நீலவண்ண அட்டை, மின் விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி ஆகியவற்றின் செயல்விளக்கத்தை செய்து காண்பித்து பின்பற்ற அறிவுரை வழங்கினார். உழவியல் உதவி பேராசிரியர் பேசுகையில், ‘காய்கறி பயர்களின் பருவங்கள், நடவுமுறை, பயிர் இடைவெளி, களை மேலாண்மை, நீர்பாசன முறைகள் பற்றி விளக்கினார். இத்திட்டத்தின் இளநிலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீ முருகவேல் ராஜன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட காய்கறி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Training Camp ,villages ,Nanjilla ,
× RELATED இயற்கை நல உணவு பயிற்சி முகாம்