×

ஈரோட்டில் அபிராமி உமன்ஸ் கேர் துவக்கம்

ஈரோடு, மார்ச் 10: பெண்களுக்கென சிறந்த மருத்துவ சேவைகள் வழங்க ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் புதிதாக அபிராமி உமன்ஸ் கேர் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் அபிராமி கிட்னி கேர், டாக்டர் தங்கவேலு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுநீரக மருத்துவ சேவை சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பெண்களுக்கென முழுமையான மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக இந்த மருத்துவமனையில் ‘அபிராமி உமன்ஸ் கேர்’ துவக்க விழா நேற்று நடந்தது. இதன் துவக்க விழாவுக்கு அபிராமி கிட்னி கேர் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பூர்ணிமா சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் சரவணன், சேர்மேன் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கோவை உமன்ஸ் சென்டர் பை மதர்வுட் கிளினிக்கல் இயக்குநர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன், தங்கம் மருத்துவமனை இயக்குநர் தங்கம் கிருஷ்ணசாமி, சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கோமதி, ஈரோடு லோட்டஸ் பெட்டல் மெடிசன் சென்டர் தலைவர் டாக்டர் உஷா ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து உலக மகளிர் தினத்தையொட்டி அபிராமி உமன்ஸ் கேர் மற்றும் கோவை உமன்ஸ் சென்டர் பை மதர்வுட் ஆகியோர் இணைந்து மூன்று நாள் இலவச மருத்துவ முகாமின் முதல் நாள் நேற்று துவங்கியது. இந்த முகாமில் பங்கேற்ற மகளிர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், ஸ்கேன் பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோவை உமன்ஸ் சென்டர் நிர்வாக இயக்குநர் டாக்டர் கோவிந்தராஜன், மருந்து ஆலோசகர் டாக்டர் ரம்யா ஜெயராம், ஈரோடு ஐ.எம்.ஏ. தலைவர் சக்கரவர்த்தி, கரூர் அபிராமி மெட்டரினிட்டி சென்டர் டாக்டர் மனோகர், டாக்டர் காந்திமதி மனோகர், கலாவதி தங்கவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...