×

குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மரக்காணம், மார்ச் 5: மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது சிறுவாடி ஊராட்சி. இப்பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி முறையாக சேகரிக்கவில்லை. ஆனால் மரக்காணம் முருக்கேரி சாலை ஓரம் அனைத்து குப்பைகளையும் கொட்டி விடுகின்றனர். இங்கு திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைபகுதியில் பொது மக்கள் பயன் படுத்தும் மூன்று குடி நீர் கிணறுகளும் உள்ளது. இந்த கிணறுகள் அருகில் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளால்
துர்நாற்றம் வீசுகிறது. இதுபோல் இந்த குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் தினமும் அந்த பகுதியில் புகை மண்டலமாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொது மக்கள் குறை கூறுகின்றனர். இது போல் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்படும் மாசுக்கள் குடி நீர் கிணறுகளில் கலப்பதால் அந்த குடி நீரை பயன் படுத்தும் பொது மக்களுக்கும் பல்வேறு மர்ம நோய்களும் ஏற்படும் அபாய நிலை உள்ளது என்றும் கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இது வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குறை கூறு கூறுகின்றனர். எனவே இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி இந்த பகுதியில் குடி நீர் கிணற்றின் அருகில் தினமும் எரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பள்ளத்தில் கொட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...