×

அரூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

அரூர், மார்ச் 5: அரூர் அருகே எம்.ஒட்டப்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பைநல்லுரிலிருந்து திப்பம்பட்டி கூட்ரோடு செல்லும் வழியில் எம்.ஒட்டப்பட்டி உள்ளது. இந்த வழியாக தர்மபுரி, செம்மணஅள்ளி, ஜக்குப்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வர பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழியாக செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிலர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் வடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Aroor ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி