×

அரூர் ஆசிரியருக்கு சாதனையாளர் விருது

அரூர், மார்ச் 5: தமிழ் நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் திருவண்ணாமலையில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ் நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சமுதாய தொண்டு, சமுக சேவை பணி ஆய்வாளர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரைக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதை ஆவடிக்குமார் வழங்கினார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா