×

கோகோ போட்டியில் ஹோலி ஸ்பிரிட் பள்ளி முதலிடம்

காளையார்கோவில், மார்ச் 5: காளையார்கோவில் அருகே உள்ள ஹோலி ஸ்பிரிட் பள்ளி மாணவர்கள் கோகோ போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்தனர். மாநில அளவிலான 14 வயத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கோகோ போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டான் போஸ்கோ மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. மாநிலத்தில் இருந்து 32 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பங்கேற்றன.

இப்போட்டியில் ஹோலி ஸ்பிரிட் அணி விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு, கரூர் ஆகிய அணிகளுடன் விளையாடியது. இதில் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதி சுற்றில் கோவை அணியுடன் மோதியது. இதில் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன், பள்ளி முதல்வர் கிரேசி சைமன், தாளாளர் லிடியா, உடற்கல்வி ஆசிரியர் ராஜா, பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Holy Spirit School ,
× RELATED மாநில கோகோ போட்டி ஹோலி ஸ்பீரிட் பள்ளி வெற்றி