×

மாநில கோகோ போட்டி ஹோலி ஸ்பீரிட் பள்ளி வெற்றி

காளையார்கோவில், பிப்.11: மாநில அளவிலான 17 வயத்திற்குட்டப்பட்ட மாணவ,மானவிகளுக்கான கோகோ போட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள தாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 32 மாவட்டங்கள் பங்குபெற்றன. போட்டியில் மாணவர் பிரிவில் காளையார்கோவில் ஹோலி ஸ்பீரிட் அணி  வேலூர்,ஈரோடு,தஞ்சாவூர்,கடலூர் ஆகிய அணிகளுடன் அதிக புள்ளிகளில் வெற்றி பெற்றது. பின்னர் இறுதி சுற்றில் சென்னை அணியுடன் மோதி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, மாணவிகளுக்கான பிரிவில் ஹோலி ஸ்பீரிட் அணி கோவை, சென்னை,திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய அணிகளுடன் அதிக புள்ளிகளில் வெற்றிபெற்றது. இறுதி சுற்றில் ஹோலி ஸ்பீரிட், ஈரோடு அணி மோதியது. இதில் ஹோலி ஸ்பீரிட் அணி இரண்டாம் இடம் பெற்றது.  வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன், பள்ளி முதல்வர் கிரேசி சைமன், தாளாளர் லிடியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : State Cocoa Competition ,Holy Spirit School ,
× RELATED கோகோ போட்டியில் ஹோலி ஸ்பிரிட் பள்ளி முதலிடம்