×

சூராணத்தில் நோய் பாதித்த நாய்கள் அதிகரிப்பு

இளையான்குடி, மே 17: இளையான்குடி அருகே சூராணம் பகுதியில் வளர்ப்பு நாய்களை விட தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் கண்ட இடத்தில் உண்பது மற்றும் உறங்குவதால் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு நோய் பாதித்த நாய்கள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், நோய் தொற்று பாதிப்படைந்த நாய்கள் குறையவில்லை.

பஸ் ஸ்டாப், சர்ச், சந்தை, மற்றும் போலீஸ் குடியிருப்பு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் கூட்டம் கூட்டமாகவும் வருகிறது. அதனால் தெருக்களில் விளையாடும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். சூராணம் பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சூராணத்தில் நோய் பாதித்த நாய்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Surana ,Ilayayankudi ,Suranam ,
× RELATED சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்