×

அம்மாப்பேட்டையில் வாடகை கட்டிடத்தில் இடநெருக்கடியில் இயங்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

பாபநாசம், மார்ச் 5: அம்மாப்பேட்டையில் இடநெருக்கடியில் வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருவதால் அதிகாரிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சொந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்து வி்ட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அடுத்த அம்மாப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சொந்த கட்டிடத்தி–்ல் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகளானதால் சேதமடைந்தது. இதையடுத்து தற்போது வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி பழுதடைந்த கட்டத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், அம்மாப்பேட்டை வருவாய் எல்லைக்கு உட்பட்டு 16 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தற்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஏற்கனவே இயங்கி வந்த சொந்த கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் வாடகை கட்டிடத்தில் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாடகை கட்டிடம் சிறிதாக இருப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாரியும், பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஓராண்டாக பழுதடைந்த நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை விரைவாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Office ,Revenue Analyst ,building ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...