×

கரந்தை கருணாசாமி கோயில் வைகாசி பெருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூர், மே14:தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது, இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி, திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறது,இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 9ம் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை நடைபெற்று நேற்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது, வசிஷ்டேஸ்வரர், பெரிய அம்மன் சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருள, சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்து நந்தி உருவம் பொறித்த கொடியை மேள தாளங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,

The post கரந்தை கருணாசாமி கோயில் வைகாசி பெருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Karantha Karunaswamy Temple Vaikasi Festival ,Thanjavur ,Vasishteswarar ,Karunaswamy temple ,Karanthai ,Vasishteshwarar Temple ,Vasishteshwara ,Vasishteshwar ,Karunaswamy ,Goddess ,Periyanayaki ,
× RELATED தஞ்சாவூர் கரந்தைகருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா தேரோட்டம்