×

ஜெயங்கொண்டம் பகுதியில் புழுதி வாரி இறைத்தபடி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுத்தும் சாலை பணிகள்

ஜெயங்கொண்டம், மார்ச் 5: ஜெயங்கொண்டம் பகுதியில் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வகையில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி முதல் சிதம்பரம் வரையிலான சாலையை தேசிய நெடுஞ்சாலையாக 142 கிலோ மீட்டர் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியானது மனிதர்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாத வகையில் நடைபெற வேண்டும். ஆனால் சாலை பணிகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் உட்படுத்தப்படுகின்றன.
இவ்வகையான லாரிகளில் 15க்கும் மேற்பட்ட டன் கணக்கில் கிராவல், ஜல்லி, சிமென்ட் கலந்த ஜல்லிகள், தார் ஊற்றப்பட்ட ஜல்லிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அனைத்து லாரிகளும் ஜெயங்கொண்டத்தை கடந்து செல்கின்றன.

தற்போது விளாங்குடி கைகாட்டி- உடையார்பாளையம்- ஜெயங்கொண்டம் இடையே சாலை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த சாலை பணிகளுக்காக கிராவல் ஜல்லிகள் கொண்டுவரப்பட்டு சாலைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் செம்மண் கிராவல்கள் கொட்டப்பட்டு அதன் மீது லாரிகள் செல்வதால் செம்மண் அதிகளவில் சாலையில் காற்றில் பறக்கிறது. இதன் காரணமாக முன்பக்கம், பின்பக்கத்தில் இருந்து வாகனங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. பொதுவாக வரும் வேகத்திலேயே செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ளும் நிலை உருவாகின்றன.

மேலும் சாலையில் செல்பவர்கள் காற்றில் பறந்து வரும் மண்ணை சுவாசிக்கும்போது யூஸ்னோ போலியோ நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர் இவ்வகையான காற்றை சுவாசிக்கும்போது நுரையீரலுக்கு சென்று மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையும் உருவாகிறது. இதனை சாலையை செப்பனிடுபவர்கள் முறையாக செய்ய வேண்டும். அதாவது காலையில் ஒருவேளை, மதியம், மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் சாலையில் தண்ணீர் விட வேண்டும். அவ்வாறு செய்யாமல் சாலையை செப்பனிடுவது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகிறது. இதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : Road ,area ,Jayankondam ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி