×

பழுதான குடிநீர்தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

கரூர், மார்ச் 5: கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மினிகுடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் தாந்தோணிமலைக்கு நிகராக அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் அருகே மக்கள் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் (மினி குடிநீர்தொட்டி) அமைத்து தரப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே இவை பயன்பாட்டில் இருந்தது.

தற்போது, டேங்க் முற்றிலும் பழுதடைந்து செயல்படாத நிலையில் உள்ளது. இதனால், இந்த பகுதியினர்களும், முகாம்வாழ் மக்களும் உபரி தண்ணீர் கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி ராயனூர் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED விவசாயிகள் வலியுறுத்தல் க.பரமத்தியில் சுற்று பகுதியில் சாரல் மழை