×

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் இரு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு


ஈரோடு, மார்ச் 5:  பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10 நாட்களுக்கு இரு தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு திருவிழா வரும் 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்க உள்ளது. முக்கிய விழாவான குண்டம் விழா வரும் ஏப்.6ம் தேதி நடக்கிறது. விழா நாட்களிலும், குண்டம் விழாவின்போதும் அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, பண்ணாரி மாரியம்மன் கோயிலில் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் 10 நாட்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் (டிஎப்ஓ) புளுகாண்டி கூறுகையில்,`ஏப்.4ம் தேதி முதல் 14ம் தேதி வரை பண்ணாரி மாரியம்மன் கோயில் பகுதியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள், ஒரு பம்ப் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். ஈரோடு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 10 தீயணைப்பு வீரர்கள் கோயில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். 24 மணி நேரமும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பர். தீயணைப்பு பணி மட்டுமின்றி மீட்பு பணிகளையும் மேற்கொள்ள தயார் நிலையில் வீரர்கள் இருப்பர்’ என்றார்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...