×

அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் 42% குறைவு டிஐஜி தகவல்

அரியலூர் மாவட் டத்தில் போலீசாரின் தடுப்பு நடவடிக்கைளால் சாலை விபத்து உயிரிழப்புகள் 42 சதவீதம் குறைந்துள்ளது. திருச்சி காவல் சரகமானது திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த 5 மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலை, மாவட்ட இதர சாலை மற்றும் கிராம சாலை என ஐந்து வகை சாலைகள் உள்ளன. இதில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விபத்துகள் தவிர்க்க முடியாததாகவும், விபத்துகளை கட்டுப்படுத்துவது மற்றும் காயம்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது காவல்துறைக்கு பெரும் சவாலாகவும் உள்ளது. திருச்சி சரகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும், வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் எதிரொலியாக கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 1ம் தேதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெரம்பலூர் தவிர மற்ற நான்கு மாவட்டங்களில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட 38 உயிரிழப்புகளை விட 2020ம் ஆண்டு 12 உயிரிழப்புகள் குறைந்து கடந்தாண்டை விட 32 சதவீதம் குறைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட 47 உயிரிழப்புகளை விட 2020ம் ஆண்டு 21 உயிரிழப்புகள் குறைந்து கடந்தாண்டை விட 45 சதவீதம் குறைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட 37 உயிரிழப்புகளை விட 2020ம் ஆண்டு 15 உயிரிழப்புகள் குறைந்து கடந்தாண்டை விட 41 சதவீதம் குறைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட 12 உயிரிழப்புகளை விட 2020ம் ஆண்டு 5 உயிரிழப்புகள் குறைந்து கடந்தாண்டை விட 42 சதவீதம் குறைந்துள்ளது. திருச்சி சரகத்தில் மொத்தமாக கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட 144 உயிரிழப்புகளை விட 2020ம் ஆண்டு 29 உயிரிழப்புகள் குறைந்து கடந்தாண்டை விட 20 சதவீதம் குறைந்துள்ளது. இத்தகவலை டிஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Tags : DIG ,road accident deaths ,Ariyalur district ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி