×

என்எம்எம்எஸ் விடைக்குறியீடு இன்று வெளியீடு

சிவகங்கை, மார்ச். 4: அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 15.12.2019ல் நடந்து முடிந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்விற்கான தற்காலிக விடைக்குறியீடு இன்று < www.dge.tn.gov.in > என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இவ்விடைகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பின் அவற்றை 10.03.2020க்குள் ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரியப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மானாமதுரையில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது