×

மானாமதுரையில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

மானாமதுரை, மே 23: மானாமதுரை அண்ணா சிலை அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதனருகில் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட எண்ணற்ற கட்டிடங்கள் அடுத்தடுத்து உள்ளன. கடந்த மே 17ம் தேதி பணிகள் முடிந்த நிலையில் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில் கடந்த மே 19ம் தேதி வங்கியை நோட்டமிட்ட மர்மநபர்கள் நுழைவு வாயிலில் இருக்கும் கிரில் கேட், ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வங்கி லாக்கர் முன் இருந்த கதவுகளை திறக்க முடியாமல் போனதால் அப்படியே போட்டு விட்டு தப்பினர்.

மறுநாள் மே 20ம் தேதி காலை வங்கியை ஊழியர்கள் திறக்க வந்த போது இக்கொள்ளை முயற்சி நடந்தது தெரியவரவே அவர்கள் இதுகுறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி கண்ணன் உத்தரவின்படி எஸ்ஐக்கள் பூபதிராஜா, நாகராஜன் மற்றும் ேபாலீசார் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தடயவியல் துறையினர் வங்கியில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது மானாமதுரை இன்னாசி முத்து நகரை சேர்ந்த பிரசாந்த (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ைகதான பிரசாந்த் சரக்கு வாகன டிரைவராக இருந்துள்ளார். கடன் அதிகமான நிலையில் வசதியாக வாழ வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதற்காக வங்கியை முதல்நாள் நோட்டமிட்டு வங்கியின் நுழைவு பகுதி ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே இறங்கி அங்கிருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துள்ளார். மெயின் கேட்டை திறக்க வெல்டிங் பட்டாசுகளில் பயன்படுத்தும் வெடிப்பொருளை பயன்படுத்தி பூட்டை உடைத்துள்ளார். பின்னர் வங்கியினுள் நுழைந்து லாக்கர் முன் உள்ள இரும்பு கதவை திறக்க முயற்சித்து முடியாததால் தப்பி சென்றுள்ளார். இதனால் லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான பணம், நகைகள் தப்பியுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post மானாமதுரையில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Anna statue ,Dinakaran ,
× RELATED மானாமதுரை ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம்: திறக்க கோரிக்கை