×

பெரியார்நகர் சந்திப்பு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

சோமனூர், மார்ச் 4:  சோமனூர் அடுத்த பூளக்காட்டில் உள்ள பெரியார்நகர் பகுதியில் மூன்று சந்திப்பு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்பட்டு வருகிறது. சோமனூர் அடுத்த ரயில்வே பாலத்தில் இருந்து எலச்சிபாளையம் வழியாக சென்னிஆண்டவர் கோயில் செல்லக்கூடிய சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பில் உள்ளது. இந்த சாலை பெரியார்நகர் பகுதியில் பூளக்காட்டில் இருந்து வரக்கூடிய கருமத்தம்பட்டி பேரூராட்சியின் சாலையும் இதனுடன் இணைகிறது.
இந்த சந்திப்பு பகுதியில் மூன்று சாலையும் சந்திக்கும் பகுதி வளைவாக உள்ளதால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் மற்ற இரண்டு வழித்தடங்களிலும் வருபவர்களுக்கும் தெரிவதில்லை. இதனால் இங்கு தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. எனவே மூன்று பகுதி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  நெடுஞ்சாலைதுறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எலச்சிபாளையம் சாலையில் மூன்று  சந்திப்பு சாலையும் மறைவாக உள்ளது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள்  மற்றவர்களுக்கு தெரிய கூடிய வகையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும், இந்த சாலையில் வேகத்தடை  இல்லாததால் அடிகடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகம்  விபத்து ஏற்படுகிறது எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம்  காட்டாமல் வேகத்தடை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து இ. கம்யூ கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ராஜாங்கம் கூறுகையில், ‘‘நெடுஞ்சாலை துறையின் சாலையும் பேரூராட்சியின் சாலையும் இந்த பகுதியில் வளைவாக சந்திக்கிறது. இதனால் எதிரெதிரே வரக்கூடிய வாகனங்கள் ஒருவருக்கொருவர் தட்டு படாததால் விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளனர்.
மேலும் விபத்தை ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : junction road ,
× RELATED நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3...