×

நில உச்சவரம்பில் கைப்பற்றிய நிலங்களை வருவாய் துறை செயலர் ஆய்வு பழநி அருகே பரபரப்பு

பழநி, மார்ச் 4: பழநி அருகே பெரியம்மாபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றில் சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. மேலும், பலர் விவசாயம் செய்வதற்கு நிலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று பெரியம்மாபட்டி, கணக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம் உட்பட திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நிலஉச்ச வரம்பு சட்டத்தின்கீழ் கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிலை குறித்தும், அவற்றிற்கு விண்ணப்பித்த விவசாயிகளின் உண்மை தன்மை குறித்தும் நேற்று கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய்த்துறை செயலருமான அதுல்ய மிஸ்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாய நிலம் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளை அழைத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, அரசின் முதியோர் உதவித்தொகை, குடிமைப்பொருள் விநியோகம், சமூக நலத்திட்டங்களின் செயல்பாடுகள், பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களின் மீதான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அரசின் திட்டங்களை மக்களிடம் சென்றடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பழநி கோயில் செயல்அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, டிஆர்ஓ கந்தசாமி,
பழநி சப்கலெக்டர் உமா, தாசில்தார் பழனிச்சாமி மற்றும் 10 தாலுகா வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Revenue Secretary ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!