×

மணல் கொள்ளை நடந்த இடத்தில் தனிநபர் கமிஷனர் அதிரடி ஆய்வு நிலக்கோட்டை அருகே பரபரப்பு

வத்தலக்குண்டு, மார்ச் 4: நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம், காணப்பட்டி பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பள்ளபட்டியை சேர்ந்த சமூகஆர்வலர் செந்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கலெக்டர் விஜயலட்சுமி மணல் கொள்ளை நடந்த பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியிருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கு தொடர்பாக ஒரு தனிநபர் கமிஷனை ஏற்படுத்தி அதற்கு மூத்த வழக்கறிஞர் காந்தியை கமிஷனராக நியமித்திருந்தார்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் காந்தி நேற்று மாலை மணல் கொள்ளை நடந்த சித்தர்கள்நத்தம், காணப்பட்டி பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் உடன் வந்திருந்த நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமரன் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் ரேவதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மணல் கொள்ள நடந்த இடத்தில் விவசாயம் செய்து பராமரித்து வந்தவர்களிடமும் விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களையும் சேகரித்து சென்றார். இந்த ஆய்வால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Commissioner ,area ,Nilakkottai ,
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...