×

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குள் புகுந்து காவலாளியை தாக்கிய வடமாநில வாலிபருக்கு தர்மஅடி

ஈரோடு, மார்ச் 4:  ஈரோடு வேலை வாய்ப்பு அலுவலகத்திற்குள் புகுந்து காவலாளியை தாக்கிய வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். ஈரோடு சென்னிமலை ரோட்டில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 பெண்கள் உள்பட 19 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர், திடீரென வேலை வாய்ப்பு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். இதைப்பார்த்த காவலாளி பிரகாஷ், அந்த வடமாநில வாலிபரை வெளியேற்ற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த  வட மாநில வாலிபர், கீழே கிடந்த கல்லை எடுத்து காவலாளி பிரகாஷ் முகத்தில் ஏறிந்தார். இதில், அவரது கன்னத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வட மாநில வாலிபரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.

பின்னர், அந்த நபரின் கைகளை கயிற்றால் கட்டி அமர வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு தாலுகா போலீசார் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்து, வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதே நபர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனையிலும் உள்ளே செல்ல முயன்ற போது, அங்கிருந்தவர்கள் விரட்டியடித்ததும் தெரியவந்தது. ஆனால், மொழி பிரச்னையால் அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து அழைத்து சென்றனர்.

Tags : Dharmadi ,attack ,Northern Territory ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது