×

2 இடங்களில் தீ விபத்து

 

ஈரோடு, மே 5: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 105 டிகிரி மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகள் தண்ணீர் இன்றி காய்ந்து சருகாக கிடக்கிறது. அதேபோல், மரங்களிலும் இலைகள் உதிர்ந்து காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அவ்வப்போது, வெயில் காரணமாகவும், அணைக்கப்படாத புகை வஸ்துகளாலும் தீ பிடித்து எரிகிறது.

இந்நிலையில், ஈரோடு பெரிய செங்கோடம்பாளையத்தில் உள்ள காலியிடத்தில் காய்ந்திருந்த புல்வெளியில் நேற்று காலை தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. அருகில் குடியிருப்புகள் இருந்ததால் விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதேபோல் ஈரோடு நரி பள்ளத்தில் உள்ள காலியிடத்தில் நேற்று மதியம் காய்ந்த புல்வெளியில் தீப்பிடித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த இரண்டு தீ விபத்து சம்பவங்களும் அணைக்கப்படாத புகை வஸ்துக்களால் தீப்பிடித்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

The post 2 இடங்களில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது