கடத்தூரில் பாமக நன்றி அறிவிப்பு கூட்டம்

கடத்தூர், மார்ச் 3: கடத்தூரில் பாமக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. ஒசஅள்ளிஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர் செந்தில், தென்னக ரயில்வே கோட்ட கமிட்டி உறுப்பினராக நியமிக்க பரிந்துரை செய்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் வேலுசாமி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடத்தூர் நகர செயலாளர் கந்தன் நன்றி கூறினார்.

Related Stories:

>