×

என்எல்சி சார்பில் வகுப்பறை கட்டிடம்

பண்ருட்டி, மார்ச் 3: பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் வகுப்பறைகள் சேதமடைந்து இருந்தன. புதிய வகுப்பறை கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதன்பேரில் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏவின் தீவிர முயற்சியால் எல்எல்சி இந்திய நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் முதல்கட்டமாக 3 வகுப்பறைகள் ரூ.30 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் அடிக்கல்நாட்டு விழா நடந்தது. என்எல்சி முதன்மை பொதுமேலாளர் மோகன் முன்னிலையில் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை நடந்தது.

இதில் தலைமை ஆசிரியர் முருகவேல், மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், ஒன்றிய துணை தலைவர் தேவகி ஆடலரசன், என்எல்சி பொதுமேலாளர் ராமச்சந்திரன், துணை பொதுமேலாளர் அசோக்குமார், முதன்மை மேலாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர் தனபதி, ஊராட்சி செயலர்கள் ஞானசேகரன், ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Classroom Building ,NLC ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...