×

திட்ட பணிகளில் முறைகேடு புகார் பேருராட்சி உதவி பொறியாளரிடம் விரைவில் விசாரணை

நாகர்கோவில், மார்ச் 3: குமரியில் பேரூராட்சி முறைகேடு புகார்  காரணமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட உதவி பொறியாளரிடம் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. குமரியில் 55 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு சாலை அமைத்தல், உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை கவனிக்க பேரூராட்சி உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் உதவி பொறியாளர்கள் உள்ளனர். உதவி பொறியாளர்கள் மூலமே பேருராட்சி பணிகள் குத்தகை விடப்படும். இதில் பணிகள் டெண்டர் முறை என்றாலும், பேரூராட்சி உதவி பொறியாளர்கள் மூலம் குறிப்பிட்ட காண்டிராக்டருக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்தி சில பொறியாளர்கள் கோடி கணக்கில் கல்லா கட்டி விடுகின்றனர். பொதுவாக  பேரூராட்சிகளுக்கு ஒரு உதவி பொறியாளர் இருக்க வேண்டும். ஆனால் குமரியில் 18 பேரூராட்சிகளை ஆரல்வாய்மொழியை தலைமையிடமாக கொண்ட உதவி பொறியாளர் ஜீவா  கவனித்து வருகிறார். இவர் மீது திட்ட பணிகளில் முறைகேடுகள் செய்ததாகவும், உயர் அதிகாரிகளை கவனித்து, விதிகளை மீறி கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணி புரிவதாகவும் பேரூராட்சிகள் இயக்குநருக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, பேரூராட்சிகள் இயக்குநர் ஆரல்வாய்மொழி பேரூராட்சி உதவி பொறியாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது, அவர் மீதான புகார்கள் குறித்து குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அவர் மீது விரைவில் விசாரணை தொடங்கும் என பேரூராட்சி அதிகாரிகள்  கூறினர்.

Tags : Assistant Assistant Engineer ,
× RELATED அருமனை அருகே பழுதான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்