×

கொல்லங்கோடு அருகே மீனவ கிராமங்களில் அலைதடுப்பு சுவர் அமைக்கும் பணி: ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆய்வு

நித்திரவிளை, மார்ச் 3: குமரி மாவட்டத்தில் கேரள மாநில கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் அலை சீற்றம் காரணமாக ஒவ்வொரு வருடமும் மீனவ கிராமங்களில் பெரும் சேதம் ஏற்படுகிறது. ஆகையால், அலை சீற்றங்களில் இருந்து மீனவ கிராமங்களை பாதுகாக்க கடந்த  சட்டசபையில் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக கொல்லங்கோடு அருகேயுள்ள நீரோடி, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை ஆகிய கிராமங்களில் அலைதடுப்பு சுவர் அமைக்க மீன்வளத்துறை சார்பில் 116 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது.

இந்த பணிகள் எவ்வாறு செய்ய வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி.யிலிருந்து பொறியியல் வல்லுநர்கள் அறிக்கை சமர்பித்து அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வல்லுநர்கள் குறிப்பிட்ட படி பெரிய அளவிலான பாறாங்கல் கொண்டு பணிகள் செய்யாமல் சிறிய அளவிலான கற்களால் பணி செய்வதாகவும், அது சுவருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மீனவ மக்கள் பிரதிநிதிகள், பங்கு தந்தையர்கள் ராஜேஷ்குமார் எம்எல்ஏ விடம் புகார் தெரிவித்திருத்தார்கள்.
இதனையடுத்து நேற்று காலை ராஜேஷ்குமார் எம்எல்ஏ நீரோடி, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை ஆகிய மீனவ கிராமங்களில் நடக்கும், அலை தடுப்புச் சுவர் (நேர் கல்) அமைக்கும் பணியை ஆய்வு செய்தார் அப்போது அவர்,   பணி மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்த  உதவி பொறியாளர்களை அழைத்து, ஐ.ஐ.டி. யின் அறிக்கையின் படி பெரிய பாறாங்கல் வைத்து பணிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்,

மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் ஆகையால் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் ஆண்டுதோறும் சேதமடையும் வள்ளவிளை - இரவிபுத்தன்துறை இடையே உள்ளசாலையை நிரந்தரமான சீர்செய்யவும், தடுப்புச் சுவர் அமைக்கவும் வலியுறுத்தினார். அவருடன் நீரோடி பங்கு தந்தை டோணி, கொல்லங்கோடு பேரூராட்சி முன்னால் தலைவர்கள், பென்ஜமின், அருளானந்தன், காங்கிரஸ் கட்சியின் முஞ்சிறை மேற்கு வட்டார தலைவர் கிறிஸ்டோபர், கொல்லங்கோடு பேரூர் தலைவர் ரெதீஸ், மாவட்ட பொதுச் செயலாளர் கோபன், மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ், உட்பட பலர் வந்தனர்.

Tags : Rajeshkumar MLA ,fishery villages ,Kollangode ,
× RELATED கன்னியாகுமரியில் அதிர்ச்சி!: மாங்காய்...