×

தாளவாடி, ஆசனூரில் சாரல் மழை

சத்தியமங்கலம், மார்ச் 3: தாளவாடி, ஆசனூரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி முற்றிலும் வனப்பகுதியை உள்ளடக்கிய பகுதியாகும். மலைப்பகுதியில் கடந்த சில மாதமாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதன்காரணமாக, யானை உள்ளிட்ட  வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. நேற்று மாலை ஆசனூர் மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் திடீரென குளிர்ந்த காற்று வீசியதோடு மழை பெய்ய துவங்கியது. லேசான சாரல் மழை சுமார் அரைமணி நேரம் பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
மழை பெய்ததால் வனப்பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி கொடிகள் தீப்பிடிக்காது என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் வறட்சி நீங்கி பசுமை நிலவ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். நீண்ட நாட்கள் கழித்து மலைப்பகுதியில் மழை பெய்ததால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...