×

மஞ்சூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மஞ்சூர், மார்ச் 2:நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட மாணவரணி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாயன்,
ஆவின் தலைவர் மில்லர், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, குந்தா கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான புத்திசந்திரன் ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் விழாவை முன்னிட்டு இசை கச்சேரி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் தலைமை கழக பேச்சாளர் கோவை கண்ணன், மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் பாரதியார், பாலகொலா ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இளைஞரணி நிர்வாகி வாசுதேவன் வரவேற்றார். முடிவில் தொட்டகம்பை பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் குட்டிசம்பத் நன்றி கூறினார்.

Tags : Jayalalithaa Birthday Celebrations ,
× RELATED ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில்...