×

கோட்டேரி கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வார வேண்டும்

நெய்வேலி, மார்ச் 2: நெய்வேலி அடுத்த கோட்டேரி ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளி எதிரே சுமார் 10 ஏக்கர் சுற்றளவு கொண்ட தாமரை குளம் உள்ளது. இந்த குளம் கோட்டேரி உள்ளிட்ட  பல்வேறு கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்து  வந்தது. இந்த குளத்தை கடந்த  சில வருடங்களுக்கு முன், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளத்தில்  ஆகாய தாமரை செடிகள் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளதால் குளத்தின் தண்ணீரை கிராம  மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும்  என்எல்சி சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் கோட்டேரி வழியாக செல்லும்போது இந்த குளத்தில் குளித்து விட்டு செல்வர். சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால்  தற்போது ஆகாய தாமரை செடிகளால் சுமார் ஆறு அடி ஆழமாக இருந்த குளத்தின் ஆழம் தற்போது இரண்டு அடியாக உள்ளது. எனவே, கோட்டேரி கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,village ,Kotteri ,
× RELATED தலைஞாயிறு அருகே வடுகூர் உப்பு குளத்தை தூர்வார வேண்டும்