×

நல்லம்பள்ளி அருகே தரமற்ற தார்சாலை அமைத்ததை கண்டித்து மக்கள் போராட்டம்

நல்லம்பள்ளி, மார்ச் 2: நல்லம்பள்ளி அருகே, சந்தாரப்பட்டி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலை தரமற்ற முறையில் இருந்ததை, மறு சீரமைப்பு செய்து கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி அடுத்துள்ள எர்ரபையனஅள்ளி பஞ்சாயத்து சந்தாரப்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்காக சந்தாரப்பட்டியில் இருந்து நாகர்கூடல், பண்ட அள்ளி சாலை வழியாக தர்மபுரி மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று வந்தனர். இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2 மாதத்திற்கு முன்பு ₹12.43லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை அமைத்து 2 மாதங்களே ஆன நிலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆபத்தான சாலையாக மாறியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த புதிய சாலையை மறு மீரமைப்பு செய்யக்கோரி அப்பகுதி மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சந்தாரப்பட்டியில் இருந்து நாகர்கூடல்-பண்டஅள்ளி சாலையை இணைக்க 2 மாதத்திற்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் போது தரமற்ற முறையில் அமைத்தனர். இதுகுறித்து ஊழியர்களிடம் தரமான முறையில் சாலையை அமைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். ஆனால் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Tags : Nallampalli ,darsal ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்