×

வத்தலக்குண்டு ஒன்றியத்தில் திமுக கிளை செயலாளர்கள் எம்எல்ஏ.,விடம் விருப்பமனு

வத்தலக்குண்டு, மார்ச் 2: வத்தலக்குண்டு ஒன்றியத்தில் திமுக கிளைச் செயலாளர்கள் மொத்த விருப்பமனுவை மாவட்ட செயலாளரிடம் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளிலும் ஊராட்சி கிளை செயலாளர்கள் விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கேபி.முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னத்துரை, பட்டிவீரன்பட்டி நகர செயலாளர் அருண்குமார், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் அப்துல்ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான கனிக்குமார் தேர்தல் பொறுப்பாளர் வக்கீல் சரவணன் ஆகியோர் மொத்த விருப்ப மனுக்களையும் மாவட்ட செயலாளர் செந்தில்குமாரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் முத்துப்பாண்டி, முருகேசன், கார்த்திக், சிக்கந்தர்பாஷா, ராஜ்குமார், மகேந்திரன், பொன்னம்பலம், பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி