×

சாராயம் காய்ச்சி விற்றவர் கைது

சேந்தமங்கலம், மார்ச் 1: கொல்லிமலை ஆரியூர் நாடு பகுதியில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக  வாழவந்தி நாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்.ஐ மணி  மற்றும் போலீசார் வாழவந்தி நாடு ஒட்டியுள்ள வனப்பகுதியில்,  ரோந்து பணியை முடுக்கி விட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு  தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவது  கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அதே  பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி(60) என்பவர் சாராயம் காய்ச்சியது  தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் 2 லிட்டர் சாராயம்  மற்றும் ஊறல்  ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.

Tags : Arrester ,
× RELATED மது பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர் கைது 45 பாட்டில்கள் பறிமுதல்