×

மேலும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு காமராஜர் மைதானத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சேட்டு, தலைவர் முகமத் அஸ்கர் முன்னிலை வகித்தனர். டிஎன்டிஜே பேச்சாளர் தஸ்லிம் வரவேற்றார்.

மாநில செயலாளர் திருச்சி சையது, மாவட்டத் தலைவர் காதர்ஷரிப், துணை செயலாளர் அப்சல் ஆகியோர் பேசினர். அப்போது, தமிழக அரசு வரும் 17ம் தேதிக்குள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் 18ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் மாபெரும் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.

வந்தவாசி: வந்தவாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று தாலுகா அலுவலகம் முன் தர்ணா போரட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் புகாரி சரீப் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கரீமுல்லா, நகர செயலாளர் ஜவகர் அலி, துணை தலைவர் ஜமால், துணை செயலாளர் காசீம் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் திருச்சி சய்யது மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார்.

போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.நசீர்அகமது, நகர முன்னாள் தலைவர் ஜெ.அக்பர், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஏஜாஸ் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர தலைவர் அ.சாதிக் அலி நன்றி கூறினார்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் எதிரே நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ஷர்புதீன் தலைமை தாங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக ரூரல் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்