×

12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஊட்டி, மார்ச் 1: நீலகிரி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு ரொக்க பரிசு, காமராஜர் விருது வழங்கப்பட்டது. ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற தலா 15 மாணவ, மாணவியர்களுக்கு ரொக்க பரிசும், காமராஜர் விருது வழங்கும் விழாவும் நடந்தது. விழாவில் எம்எல்ஏ.,க்கள் சாந்திராமு, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து மாணவ, மாணவகளுக்கு இலவச சைக்கிள்,  15 மாணவ, மாணவியர்களுக்கு ரொக்க பரிசும், காமராஜர் விருது வழங்கினார்.நிகழ்ச்சியில், 2018-19ம் ஆண்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலை மற்றும் காமராஜர் விருதும் வழங்கப்பட்டது. அதேபோல், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதிம் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் காமராஜர் விருதுகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொன்தோஸ், நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வினோத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உட்பட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Gifting Ceremony ,
× RELATED சந்தப்படுகை கிராமத்தில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா