×

தேவதானப்பட்டி அருகே காய்கறி பயிர்களில் துல்லிய பண்ணைய சாகுபடி பயிற்சி

தேவதானப்பட்டி, மார்ச் 1: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் காய்கறி பயிர்களில் துல்லிய பண்ணைய சாகுபடி பயிற்சி நடைபெற்றது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர் தொழில்நுட்ப மையம் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வராக நதி உபவடிநில விவசாயிகளுக்கு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் காய்கறி பயிர்களில் துல்லிய பண்ணைய சாகுபடி பற்றிய பயற்சி ஜெயமங்கலம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, தரமான காய்கறி பயிர் விதை உற்பத்தி, ஒருங்கிணைந்த களை மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் பற்றிய தொழில்நுட்ப கருத்துக்களை விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. இந்த பயிற்சியினை திட்ட விஞ்ஞானி கவிதா, உழவியல் துறை உதவி ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் தனபால் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : vegetable crops ,Devadanapatti ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை