×

சின்னமனூர் அருகே முத்துலாபுரம் பிரிவில் பாசனநீர் குழாயில் உடைப்பு தேங்கி நிற்பதால் சாலை சேதம்

சின்னமனூர், மார்ச் 1: சின்னமனூர் முத்துலாபுரம் பிரிவில் பாசனநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி குளம்போல் சாலையில் தேங்கி நிற்கிறது. சின்னமனூர் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு பாசன வசதிக்கு கண்மாய், குளங்களில் மழைநீர் மற்றும் முல்லை பெரியாறு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. 6 மாதம் வரையில் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வரும். இருந்தபோதிலும் பாசனப் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருவதால் விவசாயிகள் பல் வேறு சிரமம் அடைகின்றனர். விவசாயிகள் அதனை சரிகட்டும் விதமாக முல்லைப் பெரியாற்றில் குழாய்களின் வாயிலாக பூமிக்கடியில் பதித்து தண்ணீரை கொண்டு வந்து சேமிக்கின்றனர். அதனை பயன்படுத்தி விவசாயத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

தற்போது சின்னமனூர் முத்துலாபுரம் பிரிவில் பல வாகனங்கள் கடப்பதால் பாசன குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் தார்ச்சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக உடைந்த குழாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnamanur ,section ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்