×

ஜெயங்கொண்டம் பகுதியில் ரூ.21 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி கோட்ட பொறியாளர் ஆய்வு

ஜெயங்கொண்டம், மார்ச்1: ஜெயங்கொண்டம் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 21.11 கோடி செலவில் சாலை அகலப்படுத்தும் பணியினை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை மூலம் 2018- 19 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9 கிமீ தூரத்தில் சாலையை அகலப்படுத்தும் பணியை 21.55 கிலோமீட்டர் ஓடுகளத்தின் தரத்தை மேம்பாடு செய்தல் பணி மற்றும் சாலை பணி நடைபெற்று வருகிறது மேலும் 2019- 20 ஆம் நிதியாண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை அகலப்படுத்தும் பணி 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடுதளத்தின் தரத்தை மேம்பாடு செய்தல் பணி மற்றும் சாலை பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. செந்துறை-உடையார்பாளையம் அணைக்கரை சாலை மற்றும் விளாங்குடி -அன்ன காரன்பேட்டை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் மற்றும் கல்லாத்தூர்- பாப்பாகுடி மேலணிக்குழி சாலையில் சாலை பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் கோட்டப்பொறியாளர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு சாலைகளின் தரம் மற்றும் மேம்பாட்டு பணிகளில் முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வில் சாலை தரமானதாகவும் விரைவாகவும் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் விட வேண்டும் என பொறியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார் .ஆய்வின்போது ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், மற்றும் அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.



Tags : Inspection ,area ,Jayankondam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...