×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.28: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூதநத்தம் பகுதியில் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூதநத்தம் ஊராட்சியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் வெளியூர் செல்ல பஸ் ஸ்டாப்பிற்கு வர வேண்டிய நிலை உள்ளது. ஆனால், பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பதற்கு நிழற்கூடை வசதி இல்லாததால், வெயில், மழை காலங்களில் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நிழற்கூடம் அமைக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பூதநத்தம் பகுதியில் நிழற்கூடம் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers Shadow ,Papyrepatti ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிதி நிறுவனம் மீது பண மோசடி புகார்