×

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்ட விழா முகூர்த்தக்கால் உற்சவம்

பெரம்பலூர், பிப்.27: பெரம்ப லூர் பிரம்மபுரீ ஸ்வரர் திருக்கோவில் மா சிமக திருத்தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் முகூர்த் தக்கால் ஊன்றப் பட்டது.பெரம்பலூர்- துறையூர் சா லையில் உள்ள அகிலாண்டேஸ்வரி ச மேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமகம் பெருந்திருவிழாவை மார்ச் மாதம் 8ம்தேதி வெகுவிமரி சையாகக்கொண்டாடத் திட் டமிடப்பட்டுள்ளது.இதனை யொட்டி கோவில்வளாகத் தில் நேற்றுகாலை திருவி ழாவிற்கான முகூர்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனையொட்டி இந்து சம ய அறநிலையத்துறையின் செயல்அலுவலர் மணி ஏற் பாட்டில், கோவில்குருக்கள் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் உதவிகுருக் கள் கவுரி சங்கர் ஆகியோர் நடத்திய சிறப்பு பூஜைகளு க்குப்பிறகு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இதில் முன் னால் அறங்காவலர் வைத் தீஸ்வரன்,பூக்கடை சரவண ன், கீத்துக்கடை குமார் உள் ளிட்ட முக்கியப் பிரமுகர்க ள் பலரும் கலந்து கொண்ட னர்.

இதனைத்தொடர்ந்து வரு கிற சனிக்கிழமை 29ம் தே தி கொடியேற்றம் நடக்கிற து. மார்ச் மாதம் 8ம்தேதி திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடத்த ப்படுகிறது. இடைப்பட்ட தி னங்களில் ஒவ்வொரு நா ளும்காலையில் திருவிழா கேடயத்தில் சாமிஊர்வலம் நடக்கிறது.மாலையில் சிவன், அம்மன், சண்டிகே ஸ்வரர், முருகன், விநாயகர் ஆகியோரது பஞ்சமூர்த்தி புறப்பாடு, பிரம் மபுரீஸ்வரர் திருக்கோவிலு க்கு புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரிஷபவாகன, ஹ ம்ச வாகன, சூரியபிறை, சந்திர பிறை, சிம்மவாகன புறப்பாடுகள் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து செய்துள்ளனர்.

Tags : Mosimakha Therota Festival ,Perambalur Brahmapureeswarar Temple ,
× RELATED பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் ேகாயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு