×

துப்பாக்கி சுடும் தளத்தில் மரக்கன்று நடும் விழா

மொடக்குறிச்சி, பிப்.27: மொடக்குறிச்சியில் துப்பாக்கி சுடும் தளத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூரில் உள்ள கனககிரி மலை அடிவாரத்தில் துப்பாக்கி சுடும் தளம் உள்ளது. இந்த துப்பாக்கி சுடும் தளத்தில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் மற்றும் ஒளிரும் ஈரோடு அமைப்பின் சார்பில் பசுமை வனம் உருவாக்கும் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு வைத்தார். இதில், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் தலைவர் தர்மராஜ், ஈரோடு ஒளிரும் அமைப்பு தலைவர் சின்னசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : sapling planting ceremony ,shooter site ,
× RELATED மரக்கன்று நடும் விழா