பந்தலூர், பிப். 26 : பந்தலூர் அருகே பிதர்காடு பஜாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை துணை செயலாளர் நாசர் வரவேற்றார். கிளை தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் பெள்ளி, மாவட்ட செயலாளர் போஜராஜன், வட்ட செயலாளர் முகமது கனி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன். பந்தலூர் தாலுகா தலைவர் முத்துகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், பசுந் தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரியும், தேயிலை தொழிலை பாதுகாத்திட கோரியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் பொதுக்கூட்டத்தில் பேசினர்.