×

பரளி ஆற்று நீரில் மூழ்கி சென்னை வாலிபர் 2 பேர் சாவு

பாலக்காடு, பிப். 26:  சென்னை அண்ணா நகரை சேர்ந்த கோகுல் (20), கார்த்திக் (19) ஆகியோர் உட்பட 6 பேர் கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த பரளியிலுள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு நேற்று வந்தனர். விருந்துக்காக வந்தவர்கள் நண்பரின் வீட்டிற்கு அருகிலுள்ள பரளி ஆற்றை பார்க்க சென்றனர்.அருகே இருந்த அணை பகுதியில் குளிப்பதற்கு இறங்கினர். அப்போது கோகுல், கார்த்திக் ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து மாவட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கோகுல், கார்த்திக் ஆகியோரின் உடலை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : Chennai ,river ,Parali ,
× RELATED சென்னை கூவம் ஆற்றின் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு